எஸ்இசிஎல் நிறுவனத்தின் செயல்பாடுகளை மத்திய இணையமைச்சர் சதீஷ் சந்திர துபே ஆய்வு செய்தார்.

மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்) நிறுவனத்தின் செயல்பாடுகள், உள்கட்டமைப்பு, எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார். இப்பயணத்தின் போது, ராய்ப்பூரில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாயை சந்தித்த அமைச்சர், மாநிலத்தின் நிலக்கரி உற்பத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, உள்கட்டமைப்பு, மருத்துவமனை நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் ‘இ-தாடாஸ்’, ‘ஹெச்எம்ஐஎஸ்’ ஆகிய இணையதளங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார். இ-தாடாஸ் இணையதளம் முக்கிய திட்டங்களின் பொறியியல் வடிவமைப்புகளை இணையவழியில் சரிபார்த்து விரைவாக ஒப்புதல் வழங்க உதவும். ஹெச்எம்ஐஎஸ் தளம் நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கி எஸ்இசிஎல் மருத்துவமனைகளில் சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்தும்.

மேலும், பிலாஸ்பூரில் உள்ள இந்திரா விஹார் சுகாதார மையத்தில் அதிநவீன இரத்தப் பகுப்பாய்வு பிரிவையும் அமைச்சர் திறந்து வைத்தார். நிலக்கரி உற்பத்தியை அதிகரித்து எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார்.

Leave a Reply