ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வுசெய்தார்.

ஊடகம் மற்றும் சமூக வளைதளங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரம் மற்றும் பராமரிப்பு நிலைக் குறித்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று விரிவான ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், ராஜஸ்தானில் 10,064 கிலோமீட்டர் தொலைவிற்கு இடம்பெற்றுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரம், பராமரிப்பு நிலை குறித்தும், இமாச்சலப் பிரதேசத்தில் 1947 கிலோமீட்டர் தொலைவிற்கு இடம்பெற்றுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரம், பராமரிப்பு நிலை குறித்தும் திரு கட்கரி ஆய்வு செய்தார்.

நீடித்த, உறுதியான, திறன்மிக்க நெடுஞ்சாலை கட்டமைப்பின் வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், திட்டங்களைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுதல், தரநிலைகளைத் துல்லியமாகக் கடைப்பிடித்தல், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், நவீன கட்டுமான நடைமுறைகளை பின்பற்றுவது ஆகியவற்றிற்கு திரு கட்கரி முக்கியத்துவம் அளித்து விவாதித்தார். போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியைத் விரைவுபடுத்துவதற்கும், பயணிகளின் வசதியை அதிகரிப்பதற்கும், முக்கிய வழித்தடங்கள் முழுவதும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் வலுவான நெடுஞ்சாலை கட்டமைப்புகள் அத்தியாவசியமானவை என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply