ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் நிர்வாகக் குழுவின் 68-வது அமர்வு புதுதில்லியில் நிறைவுற்றது.

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (ஏபிஓ) நிர்வாகக் குழுவின் 68-வது அமர்வு, புதுதில்லியிலுள்ள ‘பாரத் மண்டபத்தில்’ மே 20 முதல் 22 வரை நடைபெற்ற மூன்று நாள் ஆலோசனைகள், உத்திசார் விவாதங்கள் மற்றும் உயர்மட்டக் கலந்துரையாடல்களுக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவுற்றது.

இந்த மூன்று நாள் நிகழ்ச்சித் திட்டமானது, மே 20 அன்று தொடங்கியது; இதனைத் தொடர்ந்து, உறுப்பு நாடுகளுக்கிடையேயான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கிலான தொடர்பாடல் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.

மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முழு அமர்வுகளில், ஏபிஓ-வின் எதிர்காலத் திசைவழி, நிர்வாகம் மற்றும் உத்திசார் முன்னுரிமைகள் தொடர்பான பல முக்கிய நிகழ்ச்சி நிரல் அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

மே 21 அன்று நடைபெற்ற தொடக்க விழாவில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடக்கவுரை ஆற்றினார். இந்தியாவின் உற்பத்தித்திறன் சார்ந்த வளர்ச்சி, டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் தளவாடத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாடு, நிலையான வளர்ச்சி முயற்சிகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றைத் தனது உரையில் அமைச்சர் சிறப்பித்துக் கூறினார்.

Leave a Reply