மத்திய மின்னணு நிறுவனத்தின் 200 மெகாவாட் சூரிய மின்தகடு உற்பத்தித் தளத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மத்திய மின்னணு நிறுவனத்தின் 200 மெகாவாட் சூரிய மின்தகடு உற்பத்தித் தளத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலும், தூய்மையான எரிசக்தியும் முக்கியப் பங்களிக்க உள்ளதாக அவர் கூறினார்.

2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கரியமில உமிழ்வை அடையும் தேசிய இலக்கைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்ணயித்துள்ளார் என்றும், சூரியசக்தி, காற்றாலை சக்தி, அணுசக்தி மற்றும் கடல் சார்ந்த எரிசக்தி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு புதைபடிவமற்ற எரிசக்தி துறைகளில் இந்தியா தமது திறன்களை விரைவாக விரிவுபடுத்தி வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

ஒவ்வொரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமும், அதற்குரிய  பயன்பாட்டையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது என்றும், தூய்மையான எரிசக்தி விரிவாக்கம் மற்றும் நீடித்த வளர்ச்சியை நோக்கி இந்தியா ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்

Leave a Reply