தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திருமாவளவனுக்கு பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இச்சந்திப்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ம. சிந்தனைச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னி அரசு, எல்.இ. ஜோதிமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
கே.பி.சுகுமார்
