உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏர் குஷன் வாகனங்களுக்கான கர்டர்கள் அமைக்கும் நிகழ்ச்சியை இந்திய கடலோரக் காவல்படை கோவாவில் நடத்தியது.

நீரிலும் நிலத்திலும் இயங்கக்கூடிய ஹோவர் கிராஃப்ட் (ஏர் குஷன் வாகனம்) எனப்படும் மிதவை கப்பல் இந்திய கடலோர காவல் படையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய கடலோர காவல் படைக்கான 4, 5 மற்றும் 6-வது ஏர் குஷன் வாகனங்களுக்கான (ACV) கர்டர் அமைக்கும் விழா, கோவாவில் உள்ள சௌகுலே கப்பல் கட்டும் தளத்தின் ரசைம் யார்டில், இன்று (மே 11, 2026) நடைபெற்றது. ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்த வகை  வாகனங்கள் 50% உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இது, தன்னிறைவு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான கூட்டு முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க எழுச்சியைக் குறிக்கிறது.

இந்திய கடலோரக் காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஆறு ஏர் குஷன்  வாகனங்களுக்கான  ஒப்பந்தம், கோவாவைச் சேர்ந்த சௌகுலே & கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் 2024 அக்டோபர் 24 அன்று கையெழுத்தானது. இந்த நவீன ரக வாகனங்கள், ஆழமற்ற நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆழ்கடலில் அதிவேக கடலோர ரோந்து மற்றும் உளவுப் பணிகள், பகல்-இரவு மற்றும் தேடுதல்-மீட்பு நடவடிக்கைகள் மூலம் செயல்பாட்டுப் பகுதிகளில் இடைமறித்தல்/தடுத்தல் மற்றும் ஆபத்தில் உள்ள கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு உதவி அளித்தல் உள்ளிட்ட பல்நோக்கு கடல்சார் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். இந்தியாவின் பரந்த மற்றும் ஆற்றல்மிக்க கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இந்த ஏர் குஷன் வாகனங்கள், இந்திய கடலோரக் காவல்படைக்கு குறிப்பிடத்தக்க உத்திசார் நகர்வுத்திறனையும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும்.

Leave a Reply