மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூன்று வடகிழக்கு மாநிலங்கள் உதயமான தினத்தைக் கொண்டாடும் நிலையில், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் பிரதமர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், அவர்கள் தங்களது முயற்சிகள் மூலம், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வையொட்டி, இடைவிடாத முயற்சி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத சுபாஷிதத்தையும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

சமஸ்கிருத வசனம் –

“चरैवेति चरैवेति चरन्वै मधु विन्दति।

सूर्यास्य पश्य श्रेमाणं न मामार न जीर्यति॥”

ஒருவர் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் எனில், அயராத மற்றும் முடிவில்லாத ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.  உலகை ஒளிரச் செய்யும் சூரியன் போன்று, தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படுபவர்களால் மட்டுமே முன்னேற்றத்தின் இனிமையை அறிய முடியும் என்பதை இந்த சம்ஸ்கிருத சுபாஷிதம் உணர்த்துகிறது.

Leave a Reply