திருச்சி தேசியக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பில், நிதித்துறையில் தொழில் வாய்ப்புகள்” என்ற கருப்பொருளில் 22 ஜூலை 2025 அன்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதுகலை வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவி செல்வி. எஸ். லாவண்யா வரவேற்பு உரையை நிகழ்த்தினார்,
இதைத் தொடர்ந்து துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் எம். ஷர்மிளா துவக்கவுரை வழங்கினார், அவர் கல்வி நோக்கங்களை உலகளாவிய நிதி போக்குகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இளங்கலை வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவி செல்வி. ராஜராஜேஸ்வரி, சிறப்பு விருந்தினரான FINSPIRE அகாடமியின் இயக்குநர் G. குமாரை அறிமுகப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர் தனது உரையில், உலகளாவிய முன்னேற்றங்களால் நிதித்துறையில் தொழில்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன என்பது குறித்து குமார் உரை நிகழ்த்தினார்.
உலகளாவிய நிதி சூழ்நிலையின் கண்ணோட்டத்துடன், டிஜிட்டல் தொழில் நுட்பம், ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் உலகளவில் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இணையப் புரட்சியின் தாக்கம் மற்றும் மின்வணிகத்தின் விரைவான விரிவாக்கம் குறித்து அவர் விவாதித்தார்,
நிதி சேவைகளில் அவை எவ்வாறு புதிய பதவிகளையும் பொறுப்புகளையும் உருவாக்கியுள்ளன என்பதை விளக்கினார்.
நிதி நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை குமார் வலியுறுத்தினார்,
மோசடி கண்டறிதல், மற்றும் முதலீட்டு பகுப்பாய்வு ஆகியவற்றில் அதன் பயன்பாடுகளை மேற்கோள் காட்டினார். தேசிய எல்லைகளுக்கு அப்பால் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் உலகமயமாக்கலின் விளைவையும் அவர் விளக்கினார்,
இந்தியாவில் உள்ள CA, CMA, மற்றும் ACS போன்ற தொழில்முறை படிப்புகள் மற்றும் ACCA (UK), CIMA (UK), CPA (USA), CMA (USA), CMA, CISA, மற்றும் CFA போன்ற உலகளாவிய தொழில்முறை படிப்புகள் குறித்து அவர் விளக்கினார்.
இந்த நிகழ்வு உலகளாவிய நிதி நிபுணர்களாக எப்படி மாறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டியது.இளங்கலை வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவன் எம். பாலபாரதி நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியை முதுகலை வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவி செல்வி ஏ. சந்திரா சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
வணிகவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். செ.கணபதி இந்நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளராக செயல்பாட்டார்.
-துரை திரவியம் ullatchithagaval@gmail.com
