காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பிய நிலையில் உள்ளன. அணைகளில் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேட்டூர் அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உபரி நீர் அனைத்தும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரியில் 50,000 கன அடி முதல் 75000 கன அடி நீர் வரை வெளியேற்றும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றின் அளவு நீர் வரத்திற்கு ஏற்ப மேலும் அதிகரிக்கக் கூடும்.

எனவே, காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

Leave a Reply