தில்லியின் மஜ்னு கா திலா பகுதியில் உள்ள அரசு சிறார் இல்லத்தில் 17 வயது சிறுவன், இரண்டு சக உடனுறை சிறார்கள் ஏற்படுத்திய காயங்களால் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இந்த உடல் ரீதியான தாக்குதல் 2025 ஜூன் 17 அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி அறிக்கையின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாக இச் சம்பவம் இருக்கும் என்று ஆணையம் கருதுகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தில்லி தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எம்.பிரபாகரன்
