பாகிஸ்தான் யுத்தத்தில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் முரளி நாயக் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, 5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! -ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.

இராணுவ வீரர் முரளி நாயக்

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற யுத்தத்தில் ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்யசாயி மாவட்டம், பெனூடா சட்டமன்ற தொகுதி, கோரண்ட்லா பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார்.

இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர் முரளி நாயக் அவர்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், மாவீரர் முரளி நாயக் அவர்களுக்கு இறுதி பிரியாவிடை அளிக்கிறேன் என்றும், தன் மகனை இழந்து தவிக்கும் பெற்றோரின் துயரத்தில் என் இதயம் கனக்கிறது என்றும், நாட்டின் பாதுகாப்பில் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர் முரளி நாயக் குடும்பத்திற்கு, ஆந்திர மாநில அரசு துணை நிற்கும் என்றும், தியாகி முரளி நாயக் குடும்பத்திற்கு ஆந்திர மாநில அரசு சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு, 5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று உறுதியளித்துள்ளார்.

Leave a Reply