சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட மயிலாப்பூர் போதைப் பொருள் தடுப்புப் பணி குழுவினர் (Anti-Narcotics Task Force – ANTF) 300 கிலோ தடைசெய்யப்பட்ட ஜர்தா மற்றும் மாவாப் பொருட்களை வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்தனர். போதைப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்திய உபகரணங்களும் அந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
தனி ஒரு நபர் மட்டுமே இத்தகைய செயலை செய்வதற்கு வாய்ப்பு இல்லை. இந்த நபரின் குற்றப் பின்னணிக் குறித்தும், இதற்கு மூளையாக இருந்து செயல்படும் நபர்கள் குறித்தும், போதைப் பொருள்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது? அது யார் மூலமாக இவர்களுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது? இவரை உள்ளூர் காவல்துறை இதுநாள் வரை கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு உண்மையானக் காரணம் என்ன? என்பது குறித்தும் முழுமையாகக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
–கே பி சுகுமார், B.E., ullatchithagaval@gmail.com
