சென்னையில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு உயர் அதிகாரிகளின் 16-வது கூட்டம் நிறைவடைந்தது.

சென்னையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு உயர் அதிகாரிகளின் 16-வது கூட்டம் இன்று நிறைவடைந்தது. 2026 ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு அமைச்சர்கள் நிலையிலான 14-வது கூட்டத்திற்கு முன்பாக இக்கூட்டம் நடைபெற்றது. நாளை நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு அமைச்சர்கள் நிலையிலான 14-வது கூட்டத்திற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்க உள்ளார்.

மீள்திறன், புதுமைக் கண்டுபிடிப்பு, ஒத்துழைப்பு, நீடித்த தன்மைக்கான கட்டமைப்பு என்ற கருப்பொருளின் கீழ் இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் 2026-ன் ஒரு பகுதியாக இக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை ஐஐடி-ல் நடைபெற்ற இக்கூட்டத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைத்தது. இதில் உயரதிகாரிகளும் பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவு தலைவர் டாக்டர் பிரவீன்குமார் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரிக்ஸ் இளையோர் விஞ்ஞானி கூட்டமைப்பு, இளையோர் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களின் பரிசு உள்ளிட்ட எதிர்கால முன்முயற்சிகள், பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு, கட்டமைப்பு திட்டம், உறுப்பு நாடுகளின் முன்மொழிவுகள், முக்கியப் பகுதிகள், பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள் பணிக்குழுக்களின் முன்னேற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.  

Leave a Reply