நாட்டின் தூய்மையான எரிசக்தி மாற்ற இலக்குகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா 2026 ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி, புதைபடிவ எரிபொருள் அல்லாத நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 300 ஜிகாவாட் என்ற உற்பத்துத் திறனைக் கடந்துள்ளது. இது 2030-ம் ஆண்டிற்குள் அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 500 ஜிகாவாட் திறனில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
புதைபடிவமற்ற எரிபொருள் பிரிவுகளின் உற்பத்தித் திறன் விவரம் (31.07.2026 நிலவரப்படி):
சூரிய சக்தி: 164.59 ஜிகாவாட்
காற்றாலை சக்தி: 58.14 ஜிகாவாட்
நீர் மின்சக்தி: 57.24 ஜிகாவாட்
உயிரி ஆற்றல்: 11.75 ஜிகாவாட்
அணுசக்தி: 8.78 ஜிகாவாட்
புதைபடிவமற்ற மொத்தத் திறன்: 300.50 ஜிகாவாட்
நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறன் தற்போது சுமார் 552 ஜிகாவாட் ஆகும். இதில் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறனின் பங்கு 54 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
இந்த மகத்தான சாதனையானது, தற்சார்பு எரிசக்தி சூழலமைப்பை உருவாக்குவதிலும், 2030-ம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிசக்தித் திறன் என்ற இலக்கை அடைவதிலும் இந்தியா அடைந்துவரும் விரைவான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
2014-ல் வெறும் 2.8 ஜிகாவாட்டாக இருந்த சூரிய ஆற்றல், தற்போது சுமார் 165 ஜிகாவாட்டாக உயர்ந்து, முக்கிய வளர்ச்சியாகத் திகழ்கிறது. அதே சமயம், காற்றாலை மின் துறையும் 2014-ல் 21 ஜிகாவாட்டாக இருந்து, தற்போது 58 ஜிகாவாட்டைத் தாண்டி வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
எம்.பிரபாகரன்
