இந்திய –அமெரிக்க கடற்படைகளுக்கான வெடிபொருள் அகற்றும் பயிற்சி கொச்சியில் நடைபெறவுள்ளது.

இந்திய கடற்படை–அமெரிக்க கடற்படைகளின் வெடிபொருள் அகற்றும் கூட்டுப் பயிற்சி, கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைத் தளத்தில், 2026 ஆகஸ்ட் 10 முதல் 14 வரை நடைபெறவுள்ளது . இந்த இருதரப்புப் பயிற்சியானது, இரு கடற்படைகளின் நிபுணத்துவம் வாய்ந்த நீர்மூழ்கிகள், வெடிபொருள் அகற்றும் குழுக்களுக்கு இடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும், தொழில்முறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐந்து நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், துறைசார் நிபுணர் பரிமாற்றங்கள, பயிற்சி, உபகரண செயல்விளக்கங்கள், சூழ்நிலை அடிப்படையிலான செய்முறைப் பயிற்சிகள் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டம், வெடிகுண்டு அகற்றும் வழிமுறைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்ள வழிவகுப்பதோடு, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் திறன்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்கும்.

இந்திய கடற்படையும் அமெரிக்க கடற்படையும் 2005-ம் ஆண்டு முதல் கூட்டு மீட்பு, வெடிகுண்டு அகற்றும் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. வரவிருக்கும் பயிற்சி எட்டாவது பதிப்பாகும்.

Leave a Reply