ஹரியானாவின் 77-வது வனப் பெருவிழா கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்பு.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், மனேசரில் நடைபெற்ற ஹரியானாவின் 77-வது வனப் பெருவிழா கொண்டாட்டங்களில் இன்று கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி, மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு ராவ் நார்பீர் சிங், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர், குருக்ராம் நகரை வெறும் நவீன நகரமாக மட்டுமின்றி, ஒரு பசுமை நகரமாகவும் மாற்றுவதற்கான மாநில அரசின் முயற்சிகளைப் பாராட்டினார். ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பதிலும், காற்று மாசுபாட்டைத் தடுப்பதிலும் மத்திய அரசின் பரிந்துரைகளை ஹரியானா அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். மண் வளங்களின்  பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பராமரிப்பதில் புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

விழாவின்போது, ‘தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல்’ முன்முயற்சியின் கீழ் அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மரக்கன்றுகளை நட்டு, உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். 

Leave a Reply