மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயரும், புதுமைப்பெண் திட்டத்தின் உதவித்தொகை ரூ.1500 ஆக உயரும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயரும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார்.
கே.பி.சுகுமார்
