தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு!-ஒருவர் கைது!-இரவு நேரத்தில் நடந்த விபரீதம்.

விருதுநகா் மாவட்டம், வச்சக்காரபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார்கோட்டை கிராமத்திற்கு புகாரை விசாரிக்க சென்ற வச்சக்காரபட்டி காவல் நிலைய தலைமை காவலர் முருகன் (பணி எண் 1947) என்பவரை, நேற்று (10.11.2021) இரவு 10.45 மணியளவில் ராசு என்பவரின் மகன் ரவி @ குமார் (வயது 30) என்பவர் விறகு வெட்டும் அரிவாளால் வெட்டியதில், தலைமை காவலர் முருகன் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தற்போது மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

ரா. ரவி @ குமார் (வயது 30) (File Photo.)

இதுசம்மந்தமாக வச்சக்காரபட்டி காவல் நிலையத்தை நாம் தொடர்பு கொண்டோம்.

மன்னார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த எதிரி ரவி @ குமார் (வயது 30) என்பவருக்கும், அவரது சித்தப்பா பால்பாண்டி என்பவருக்கும் நீண்ட நாட்களாக இடத் தகறாறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், எதிரி ரவி @ குமாருக்கும், அவரது சித்தப்பா பால்பாண்டிக்கும் நேற்று (10.11.2021) இரவு வாய் தகறாறு ஏற்பட்டு; அது கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த ரவி, அவரது சித்தப்பா பால்பாண்டியை விறகு வெட்டும் அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார்.

உடனே பால்பாண்டி, வச்சக்காரபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, அப்புகாரை விசாரிப்பதற்காக தலைமை காவலர் முருகன் மன்னார்கோட்டை கிராமத்திற்கு நேற்று (10.11.2021) இரவு சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த ரவி, நீ என்ன பால்பாண்டிக்கு சப்போர்ட்டா?- என்று சொல்லி, தலைமை காவலர் முருகனை விறகு வெட்டும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் தலைமை காவலர் முருகனின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுசம்மந்தமாக வச்சக்காரபட்டி காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு (Crime No: 198/2021) செய்து, இன்று (11.11.2021) ரவியை கைது செய்து; சற்று முன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply