“சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்!- அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரின் வெற்றிக்கு ஆபத்து! -சேந்தமங்கலம் தொகுதி கள நிலவரம்!“-என்ற தலைப்பில் நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்கள் 18.03.2021 அன்று ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார்.
அதில், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ C.சந்திரசேகரனுக்கு, அதிமுக தலைமை இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்பதற்காக, சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக C.சந்திரசேகரன் களமிறங்கி, தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
தற்போது சுயேட்சையாக களமிறங்கி இருக்கும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் C.சந்திரசேகரனை அதிமுக தலைமை சமாதானப்படுத்தவில்லை என்றால்; அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் எஸ்.சந்திரனின் வெற்றிக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று அதில் அப்போது குறிப்பிட்டு இருந்தார்.
கீழ்காணும் இணைப்பை பாருங்கள்..! http://www.ullatchithagaval.com/2021/03/18/55053/
நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர் துரைபெஞ்சமின் அவர்கள் சொன்னப்படிதான் தற்போது சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்!-சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் முடிவு!-முழு விபரம்.
தற்போது வெற்றிப் பெற்றுள்ள திமுக வேட்பாளர் கே.பொன்னுசாமி பெற்ற வாக்குகள்: EVM Votes: 89146 + Postal Votes: 1535 = 90681
அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் எஸ்.சந்திரன் பெற்ற வாக்குகள்: EVM Votes:79703 + Postal Votes: 485 = 80188
சுயேட்சையாகப் போட்டியிட்ட சேந்தமங்கலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் C.சந்திரசேகரன் பெற்ற வாக்குகள்: EVM Votes: 11328 + Postal Votes: 43 = 11371
சுயேட்சையாகப் போட்டியிட்ட C.சந்திரசேகரனை அதிமுக தலைமை சமாதானப்படுத்தியிருந்தால், இத்தொகுதியை அதிமுக நிச்சயம் தக்க வைத்திருக்கலாம்.
முக்கிய அறிவிப்பு:
2016 சட்டமன்றத் தேர்தலில் C.சந்திரசேகரன் அதிமுக சார்பில் போட்டியிட்டு 91339 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இதே கே.பொன்னுசாமி 79006 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
http://www.ullatchithagaval.com/2021/05/04/56516/
