ICSE-10-ம் வகுப்பு மற்றும்12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஜூன் முதல் வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்!

CISCE CEO, GERRY ARATHOON.

நாடு முழுவதும் கொரோனா (COVID-19) தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (COUNCIL FOR THE INDIAN SCHOOL CERTIFICATE EXAMINATIONS – CISCE) 10 மற்றும் 12 வகுப்புகளின் வாரியத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

அதன் படி, மே 4-ந் தேதி முதல் நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா (COVID-19) தொற்று நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, தேர்வு நடத்துவது குறித்து ஜூன் முதல் வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (COUNCIL FOR THE INDIAN SCHOOL CERTIFICATE EXAMINATIONS – CISCE) தலைமை நிர்வாகியும், செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply