திருச்சி அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!-பெண்கள் சாமி ஆடிய வினோதம்.

திருச்சி, கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள், திருச்சி- தஞ்சை சாலை, மஞ்சதிடல் பாலம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சில பெண்கள் சாமி வந்து ஆடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தொற்றுள்ள இப்பேரிடர் காலங்களில் இதுபோன்ற போராட்டங்களில் பொது மக்கள் ஈடுப்படுவது விரும்பதகாத விளைவுகளை உண்டாக்கும். காவல் துறைக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகள் இந்த பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி, பொது மக்களுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். அதுதான் பொது அமைதிக்கு நல்லது.

-ஆர்.சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN June 16, 2020 3:35 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply