சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நாளை தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெரும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கான ஆயத்தபணிகள் கடந்த ஒரு மாதத்திற்கும்மேலாக நடைபெற்று வருகிறது. நாளை துவங்கவுள்ள 16-ம் ஆண்டு மலர் காண்காட்சியை தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சீனிவாசன், துரைகண்ணு, நடராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டு துவக்கி வைக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே நடைப்பெற்று வந்த மலர்கண்காட்சியானது இந்த ஆண்டு 5 நாட்கள் நடைபெறுகிறது. இதனால் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விழாவிற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இப்பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி நேற்று ஆய்வு செய்தார். ஏரி பூங்காவில் பேவர் ப்ளாக் பதிக்கும் பணி, புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகள், ஏற்காடு பகுதிகளில் நடைப்பெற்று வரும் வர்ணம் பூசும் பணிகள், உள்ளிட்டவைகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசணைகள் வழங்கினார்.
மேலும் ஏற்காட்டில் புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறக்கப்படஉள்ள தங்கும் விடுதியையும் பார்வையிட்டார். இந்த விடுதிக்கு ஏற்காடு இல்லம் என பெயரிடப்பட்டுள்ளது. ஆய்வின்போது மத்திய கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன், ஏற்காடு எம்.எல்.ஏ. சித்ரா மற்றும் ஏற்காடு முன்னாள் சேர்மேன் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
-நவீன் குமார்.
