கடந்த 17.௦4.2௦18 அன்று, திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதை யாத்திரையாக சென்றவர்களில் இருபெண்கள் இரவு 11.15 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றுப் பாலத்தின் நடைமேடையில் நடந்து சென்றபோது, தரமற்ற சிமெண்ட் பலகை சேதமடைந்து காவிரி ஆற்றுக்குள் விழுந்தனர். இதைக் கண்ட அவர்களின் பின்னால் சென்ற பக்தர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மற்றவர்கள் யாரும் விழுந்துவிட கூடாது என்பதற்காக, சம்பவ இடத்தில் நெடுஞ்சாலை ரோந்து பணி போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.
இச்செய்தி நமது ‘உள்ளாட்சித்தகவல்‘ ஊடகத்தில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி –சென்னை காவிரி பாலம் சீரமைப்பு பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.
-ச.ராஜா, ரா.ரிச்சி ரோஸ்வா.
