Home|News|மழைக் காலத்தை முன்னிட்டு குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை!-தமிழக அரசு ஏற்பாடு. மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக, காய்கள் மற்றும் தக்காளி ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையிலும், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையிலும், சென்னையில் இன்று முதல் 50 தற்காலிக பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. -கே.பி.சுகுமார்.