தீபாவளி வருவதற்கு முன்பாகவே, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக பிளம் கேக் தயாரிக்கும் விழா, ஏற்காடு ஜி.ஆர்.டி.ஹோட்டலில் இன்று நடைப்பெற்றது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கான கேக் வகைகளை தயாரிப்பதற்காக 45 நாட்களுக்கு முன்பு பலவகையான உலர் பழங்களை, தேன், ஒய்ன் உள்ளிட்ட மது வகைகளில் ஊற வைப்பது வழக்கம்.
அவ்வகையில் ஏற்காட்டில் உள்ள ஜி.ஆர்.டி. நேட்சுரல் டிரைய்ல்ஸ் ஹோட்டலில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கேக் கலப்பு திருவிழா நடைப்பெற்றது.
ஹோட்டல் பொது மேலாளர் ராஜீ ரங்கராஜன், செஃப் முத்து சண்முகவேல் ஆகியோர் தலைமையில் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு கேக் தயாரிக்கும் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
அப்போது திராட்சை, முந்திரி, பிஸ்தா, பாதாம், பேரிட்சை உள்ளிட்ட 15 வகையான உலர் பழங்களுடன் தேன் மற்றும் ஒய்ன் உட்பட பல்வேறு வகை திரவியங்கள் கலக்கப்பட்டது. 50 கிலோ அளவுள்ள இந்த கலவை 45 நாட்கள் ஊறவைக்கப்படும்.
மேலும், இந்த கலவையுடன் மைதா, சர்க்கரை சேர்த்து 100 கிலோ புட்டிங் கேக்கும் தயாரிக்கப்படவுள்ளதாகவும், இந்த வகை கேக்குகள் சுவையுடன் இருப்பது மட்டுமின்றி, சுத்தமானதாகவும் இருக்கும். இந்த கேக்கை சாப்பிட விரும்புவோர், தங்கள் ஹோட்டலில் முன்பதிவு செய்ய வேண்டும் என ஹோட்டலின் பொது மேலாளர் ராஜீ ரங்கராஜன் கூறினார்.
-நவீன் குமார்.
