முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாகவும், ஆசியாவின் மிகப்பெரிய முதலீட்டு மையங்களில் ஒன்றாகவும் தமிழகம் மாறும் : தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பேச்சு!

pr100915a

pr100915b_1

pr100915_441pr100915_4412pr100915_4413pr100915_4414pr100915_4415

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த தமிழக அரசு சார்பில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பேசியதாவது:-

இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. எதிர்பார்த்த இலக்கை விட இரண்டு மடங்கு முதலீடுகள் கிடைக்க உள்ளன. அதாவது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்திற்கு 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வர உள்ளன. இதில் 50 சதவீத முதலீடுகள் தென் மாவட்டங்களுக்கு வர உள்ளன.

மேலும், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை தமிழகம் நடத்தும். அடுத்த மாநாடு 2017ல் நடைபெறும்.

உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி மையமாக சென்னை மாறும். தற்போது சென்னையில் 3 நிமிடத்திற்கு ஒரு கார் தயாராகி வருகிறது.

முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாகவும், ஆசியாவின் மிகப்பெரிய 3 முதலீட்டு மையங்களில் ஒன்றாகவும் தமிழகம் மாறும். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பேசினார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com