இந்தியாவில் பாலியல் பாலத்கார சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலமாக தலைநகர் டெல்லி உள்ளது. டெல்லியில்தான் அதிகமான பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் டெல்லியில் 1,800 வழக்குகள் பதிவாகி உள்ளது என்று, தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் கற்பழிப்பு, பாலியல் தொந்தரவு, பெண் வன்கொடுமை, குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறைவாக உள்ள பகுதிகளாக நாகலாந்து, லட்சத்தீவு, புதுச்சேரி, தத்ரா நகர்வேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. அதாவது, இந்திய அளவில் பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு 6 -வது இடம் கிடைத்துள்ளது.
யூனியன் பிரதேசங்கள் அல்லாத, பெரிய மாநிலங்கள் வரிசையில் பார்க்கும் போது, பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் வகித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்த பெண்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால், தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை 18.4 சதவிதமாக மட்டுமே உள்ளது. எதிர்காலத்தில் இதை இன்னும் குறைப்பதற்கு தமிழக அரசும், தமிழக காவல்துறையும் முயற்சிக்க வேண்டும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
