இலங்கை, கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 24.07.2015 காலை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதியை வரவேற்றனர்.
2014-ம் ஆண்டில் பல பிரிவுகளில் சிறந்து விளங்கிய 25 மாணவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன மற்றும் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா அணிவகுப்பில் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி வைத்திருந்த ஒரு மாணவனை பாதுகாப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இம்மாணவனுக்கு தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி எப்படி கிடைத்தது? பள்ளி விழாவுக்கு தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியுடன் வரவேண்டிய அவசியம் என்ன? இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொல்வதற்கான சதி திட்டமா? என இலங்கை பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-வினித்.
