ஏற்காடு, செங்காடு கிராமத்தில் முத்திரை தாள் துணை ஆட்சியர் புஷ்பவள்ளி தலைமையில் மனு நீதி முகாம் நடைப்பெற்றது. முகாமில் 10 மனுதாரர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் துணை ஆட்சியர் அதிருப்தி அடைந்தார்.
முகாம் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 12.30 மணி வரை நடைப்பெற்றது. இந்த முகாமில் வருவாய் துறையினர், வட்ட வழங்கல் அலுவலர், ஊரக வளர்ச்சி துறையினர், வன துறையினர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
மருத்துவம், வேளாண்மை, காவல், போக்குவரத்து, மின்வாரியம், தீயணைப்பு உள்ளிட்ட துறையை சார்ந்தவர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை.
மேலும், முகாமிற்கு 10 பொது மக்கள் மட்டுமே கலந்து கொண்டு முதியோர் உதவி தொகை, ஜாதி சான்று உள்ளிட்ட 11 மனுக்களை அளித்தனர். செங்காடு வார்டு கவுன்சிலர் கனேசன். வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும், தண்ணீர் வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டு என்று மனு அளித்தார். மனுவை பெற்று கொண்ட துணை ஆட்சியர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
முகாமில் கலந்து கொண்டு துணை ஆட்சியர் பேசியதாவது: ஏற்காடு மலைக் கிராமங்களில் மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவேதான் மக்கள் குறைகளை கேட்க கிராமங்களுக்கு நேரடியாக வரும் இது போன்ற முகாமிற்கு பொதுமக்கள் குறைவாக வந்துள்ளனர். இங்கு வந்த பொதுமக்கள் தங்கள் வீட்டருகே உள்ளவர்களிடம் இது போன்ற முகாம் குறித்து கூற வேணடும் இவ்வாறு கூறினார்.
-நவீன் குமார்.
