டெல்லி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், இன்று முற்பகல் 11.50 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 64 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால் டெல்லி முதல் அமைச்சர் ஆகிறார்.
இத்தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளும் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், அரவிந்த கெஜ்ரிவாலுக்கு, பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
