டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி முன்னணி !

Arvind-Kejriwal

Delhi Election Results

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 14 மையங்களில் பலத்த பாதுகாப்புடன்  தொடங்கியது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இதில், மொத்தம் 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 9.38 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 50 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

-எஸ்.சதிஸ் சர்மா.