இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர்கள், மனைவி மற்றும் மகன்கள் ஆகியோர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது.
மகிந்த ராஜபக்ஷவிற்கு நாமல், யோசித்த, ரோகித்த என்று மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர்கள் மீது பாலியியல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளும், அதற்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களும் பெருமளவில் கிடைத்துள்ளன. இதில் தமிழ் திரைப்பட நடிகைகளும் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோகித்த, சட்டவிரோத ஆயுதங்களோடு திருகோணமலைக் காட்டுக்குள் தனது நண்பர்களோடு செல்லும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.கே 47 ரக துப்பாக்கிகளோடு திருகோணமலைக் காட்டுக்குள் தனது நண்பர்களோடு சென்று வனவிலங்குகளை இவர்கள் வேட்டையாடியதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து விரைவில் போலிஸ் விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.
-எஸ்.சதிஸ் சர்மா.
