நீங்கள் யார்? உங்களுக்கும், இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு? : சர்வதேசத் தரகர் சுப்பிரமணியன் சுவாமியிடம், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி கேள்வி!

Hon'ble Mr. Justice Chikka Rachappa Kumaraswamy

Hon’ble Mr. Justice Chikka Rachappa Kumaraswamy

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னையும் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகனும், சர்வதேசத் தரகர் சுப்ரமணியன் சுவாமியும், தொடர்ந்து மனு மேல் மனு போட்டு வருகிறார்கள்.

மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையில், தொடர்ந்து குறுக்கிட்டு வந்தால், கோர்ட்டில் நேரில் ஆஜராக நேரிடும். குறுக்கீடு தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும். உங்கள் அரசியலை தமிழகத்துடன் வைத்துக்கொள்ளுங்கள். கோர்ட்டை அரசியல் களமாக பயன்படுத்தாதீர்கள் என தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் தரப்பு வழக்கறிஞரை, கடந்த 07.01.2015 அன்று நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி கடுமையாக  எச்சரித்தார்.

அதே போல், சர்வதேசத் தரகர் சுப்ரமணியன் சுவாமியையும், நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி ஏற்கனவே எச்சரித்து அனுப்பினார். ஆனால், இருவரும் திருந்துவதாக தெரியவில்லை.

அதன் பிறகு சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். நாங்கள் ஒன்றும் உத்தரவு போடமுடியாது. நீங்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்திலேயே முறையிட்டு கொள்ளுங்கள் என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கை விட்ட நிலையில், வேறு வழியில்லாமல் மறுபடியும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை சர்வதேசத் தரகர் சுப்ரமணியன் சுவாமி நாடினார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு,  நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முன்னிலையில் இன்று (04.02.2015) விசாரணைக்கு வந்தது.

jj casae 04.02.2015

அப்போது, சுப்பிரமணியன் சுவாமியை பார்த்து “நீங்கள் யார்?” என்று கேட்ட நீதிபதி, உங்களுக்கும், இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு என்றும், எந்த காரணத்துக்காக 3-ம் தரப்பு வாதியாக இணைக்க வேண்டும் என்றும் வினவினார்.

இதற்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, 2ஜி வழக்கிலும் மற்றும் இந்த வழக்கிலும் தான் ஆஜராகி வாதாடி வருகிறேன் என்றும், வழக்கின் உண்மையை நிலைநாட்ட தன்னை மூன்றாம் தரப்பாக சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு ஜெ.ஜெயலலிதா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் முதலில் புகார் செய்தது மட்டும்தான் சுப்பிரமணியன்சுவாமி எனவும், ஊழல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பெருமாளின் புகாரின் பேரிலேயே வழக்கு தொடர்ப்பட்டது எனவும் ஜெ.ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனு மீது நாளை (05.02.2015) தீர்ப்பளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையை அவ்வளவு எளிதில் முடிக்க விடக் கூடாது என்பதில், தி.மு.க. தலைமையும், சர்வதேசத் தரகர் சுப்ரமணியன் சுவாமியையும், அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.

போகிறப் போக்கைப் பார்த்தால், இந்த நீதிபதி சரியில்லை. நீதிபதி இருக்கையில் எங்களை அமர்த்துங்கள் என்று இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in