தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி!  

???????????????????????????????

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மேலூர் அருள்மிகு தெப்பகுளம் மாரியம்மன் கோவிலில் நேற்று 13-வது ஆண்டு தைப்பூசத் திருவிழா நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள ஸ்ரீபுற்று மாரியம்மனுக்கு காலை கணபதி ஹோமம், சர்ப்ப ஹோமம், 108 சங்காபிஷேகம், மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் புற்று மாரியம்மனுக்கு புஷ்பாஞ்சலியும், சிறப்பு அலங்கார தீபாரதானைகளும் நடந்தது.  இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்க்பபட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், நிர்வாக அதிகாரி கணேசன், பிரதான பட்டர் சிவா, பட்டர் குரு ஆகியோர் செய்திருந்தனர்.

-பி.கணேசன் @ இசக்கி.