ஏற்காடு அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் சி.அண்ணா துரை மற்றும் ஒற்றிய குழு துணை தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் ஏற்காடு சாட்டை சமயபுர கோவிலில் இன்று (10.10.2014) அதிகாலை 4 மணி முதல் 7.30 மணி வரை சிறையில் உள்ள அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வேண்டி சுதர்சன யாகம் வளர்த்தனர்.
இதில் ஒன்றிய கழக துணைச் செயலாளர் ஆறுமுகம், மாணவரணி ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மனோ, பாலு, குமார், அன்பு, செம்மநத்தம் பஞ்சாயத்து தலைவர் சிதம்பரம், ஒன்றிய இணைச் செயலாளர் ஜான்சி ஆரிப்பால், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
-நவீன் குமார்.
