நிலம் பாலைவனமாதல், வறட்சி ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்கிறது: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.

நிலம் பாலைவனமாதல், வறட்சி ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான உலகளாவிய தினம் ஆண்டுதோறும் ஜூன் 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது. பாலைவனமாதல், நிலச்சீரழிவு, வறட்சி ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் இந்த தினம் ஒரு உலகளாவிய தினமாகத் திகழ்கிறது.

இது தொடர்பாக புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்று உரையாற்றினார். கொள்கை, உறுதிப்பாடு, அறிவியல்ரீதியான புதுமைக்கண்டுபிடிப்பு, பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, சுற்றுச்சூழல் மீட்பை நீடித்த வளர்ச்சிக்கான ஒரு பயன்மிக்க வழிவகையாக மாற்றும் என்பதை இந்தியாவின் அணுகுமுறை விளக்குவதாக கூறினார்.

பான் சேலஞ்ச் திட்டத்தின் கீழ், 2030-ம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை மீட்டெடுக்கும் இலக்கிற்கு எதிராக இந்தியா ஏற்கனவே 21.76 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் பாலைவனமாதலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நீடித்த நில மேலாண்மையை நாடு தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் கூறினார்.

2030-ம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை மீட்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்திருந்ததாக திரு யாதவ் குறிப்பிட்டார். இது உலகின் மிகப்பெரிய நிலம் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

Leave a Reply