20 தமிழர்களை கொன்ற ஆந்திர போலீசார் மீது, கொலை வழக்குப் பதியுமாறு ஐதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு!-முழுவிபரம்.

tap

ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா.

ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா.

நீதிபதி பி.வி.சஞ்சய்குமார்.

நீதிபதி பி.வி.சஞ்சய்குமார்.

GOVT OF AP GOVT OF AP.png1 GOVT OF AP.png3

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் சிவில் உரிமைகள் கண்காணிப்பு குழு (civil liberties monitoring committee) உள்பட  பல்வேறு அமைப்புகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் N.சின்னராஜப்பா.

ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் N.சின்னராஜப்பா.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட ஐதராபாத் உயர் நீதிமன்றம், இரண்டு நாட்களில் பதில் அளிக்கும்படி, ஆந்திர மாநில அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆந்திர மாநில காவல்துறை டிஜிபி ஜெ.வி.ராமுடு 16 பக்க அறிக்கையை  தாக்கல் செய்தார்.

ஆந்திர மாநில காவல்துறை டிஜிபி J.V.ராமுடு.

ஆந்திர மாநில காவல்துறை டிஜிபி J.V.ராமுடு.

இந்த வழக்கு ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய்குமார் ஆகியோர் முன்னிலையில், இன்று (10.04.2014) விசாரணைக்கு  வந்தது.

ஆந்திர மாநில டிஜிபி டிஜிபி ராமுடு அளித்த அறிக்கை திருப்தி அளிக்கவில்லை. என்கவுன்டர் என்பது இருமாநிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால், உள்ளுர் காவல்துறை விசாரணையை எப்படி ஏற்க முடியும்? 20 பேரை கொன்ற வழக்கில் ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கொலை வழக்கு பதிவதே நியாயமாக இருக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, உள்துறை அமைச்சர் N.சின்னராஜப்பா ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in