காசி தமிழ்சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பு தொடங்கியுள்ளதையடுத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், தமிழ்நாட்டில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காசிக்கு வருகை தரும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அன்பான வரவேற்பை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் கருப்பொருளான ‘திருக்குறள் பயில்வோம்’ என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள பிரதமர், மாபெரும் ஞானியான திருவள்ளுவரின் காலத்தால் அழியாத ஞானம், மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 10 வெளிநாட்டு மொழிகள் உட்பட 50 மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டதைப் பாராட்டிய அவர், இத்தகைய முயற்சிகள் திருவள்ளுவரின் தத்துவத்தை இளைஞர்கள் மத்தியில் மேலும் பிரபலப்படுத்த உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“‘காசி தமிழ்ச் சங்கமம் 5.0’ இன்று தொடங்கியுள்ளதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்!
தமிழ்நாட்டிலிருந்தும், நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் அமரத்துவமிக்க காசி நகரத்திற்கு வருகைதரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
இந்த ஆண்டு சங்கமத்தின் கருப்பொருளான ‘திருக்குறள் பயில்வோம்’ என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. மானிட வாழ்வின் பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்தாழமிக்க வழிகாட்டுதல்களை திருவள்ளுவப் பெருந்தகையின் ஞானம் வழங்குகிறது. 10 வெளிநாட்டு மொழிகள் உட்பட 50 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது அற்புதமானது. திருவள்ளுவப் பெருந்தகையின் சிந்தனைகள், இளைஞர்களிடையே இன்னும் பரவலாகச் சென்றடைய இதுபோன்ற முன்முயற்சிகள் வழிவகுக்கட்டும்.
தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, ‘காசி தமிழ்ச் சங்கமம்’ கலாச்சார, அறிவுசார் பரிமாற்றங்களுக்கான ஒரு சிறப்புமிக்க தளமாகப் பரிணமித்துள்ளது. அதே வேளையில் ‘உன்னத பாரதம்’ என்ற ஒருமைப்பாட்டுணர்வும் இந்த சங்கமத்தால் வலிமையடைந்துள்ளது.”
எஸ்.சதிஸ் சர்மா
