ஐஐடி கரக்பூரைச் சேர்ந்த, இன்ஃபோசிஸ் விருது பெற்ற பேராசிரியர் சுமன் சக்ரவர்த்தி, தொலைதூரத்தில் உள்ள, நிதியாதாரம் குறைவான பகுதிகளுக்குக் கட்டுப்படியாகும் செலவில் நோய் கண்டறியும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார்.

அண்மையில் தமது குழுவுடன் சேர்ந்து, இன்ஃபோசிஸ் பரிசைப்  பெற்ற பேராசிரியர் சுமன் சக்ரவர்த்தியின் பல தொழில்நுட்பங்கள், தொலைதூரத்தில் வாழும் மக்களுக்கு சமூக சுகாதாரப் பணியாளர்கள் சுகாதார-ஆதரவை வழங்க உதவுகின்றன. இவர்களின் முன்முயற்சி குறிப்பாக சமீபத்திய தொற்றுநோயால் தூண்டப்பட்டதாகும்.

இவர்கள் உருவாக்கியுள்ள கோவிராப் (COVIRAP) எனப்படும் தொற்றுநோய் கண்டறிதலுக்கான நியூக்ளிக் அமில அடிப்படையிலான விரைவான நோயறிதல் சோதனையானது, தொற்று நோய்களை பரிசோதிப்பதற்கான ஆதார-தீவிர ஆர்டி-பிசிஆர் (RT-PCR ) க்கு மாற்றாக உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. வன்பொருளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல், குறிப்பிட்ட சோதனை நெறிமுறையின்படி சாதனத்தைத் தனிப்பயனாக்குதல் (customizing) மற்றும் முன்நிரலாக்கம் (preprogramming) செய்வதன் மூலம் எந்தவொரு தொற்றுநோயைக் கண்டறிவதற்கும் இதனைப்  பயன்படுத்தப்படலாம். 

பேராசிரியர் சக்ரவர்த்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைக்கப்பட்ட, தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி போர்டில்  (SERB), ஜே.சி. போஸ் தேசிய ஆய்வுப்புலத்தில் உள்ளார். இவர் தமது குழுவுடன் இணைந்து ஏராளமான நோயாளி, தொலைதூர  மருத்துவர் மற்றும்  கண்டுபிடிக்கப்பட்ட சிக்கனமான நோயறிதல்-தொழில்நுட்பங்கள் இடையே பணியாற்ற கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட மற்றும் எளிய மருத்துவ உபகரணங்களைத்  தயாரிப்பதில் குறு-சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்குபெறும் நோக்கில் இது அமைந்துள்ளது.   கடினமான சூழ்நிலையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒரு புதிய முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திவாஹர்

Leave a Reply