பனிமூட்டக் காலங்களில்இந்திய ரயில்வே சேவையில் கால தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நம்நாட்டின் வடக்குப் பகுதிகளில், ஏற்படும் பனிமூட்டங்களிலிருந்து ரயில் பயண சேவையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும்.

ரயில் இஞ்சின்களில் பனி மூட்டத்தை நீக்கும் கருவிகள் பொருத்தப்படுவது, அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துதல், தண்டவாளங்களுக்கு அருகில், வெள்ளைநிற கோடுகள் இடுவது, லெவல் கிராசிங் பகுதிகளில்  விசில் சப்தத்தை எழுப்பக் கூடிய கருவிகள் மற்றும் எல்இடி பல்புகளை பொருத்துதல், பிரதிபலிக்கக் கூடிய சிக்மா வடிவிலான சிக்னல் அமைப்பது,

60 கிலோ மீட்டரிலிருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயிலை இயக்குவது போன்ற முக்கிய நடவடிகைகள் மேற்கொள்ளப்படும்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply