அக்டோபர் 28 முதல் ஒரு மாத காலத்திற்கு மாபெரும் பாதுகாப்பு இயக்கத்தை இந்திய ரயில்வே கடைப்பிடிக்கிறது.

இந்திய ரயில்வேயின் மிக முக்கிய முன்னுரிமையாக பாதுகாப்பு நீடிக்கிறது. இதன் அடிப்படையில், நிலையான கட்டடங்கள் இயங்கும் எஞ்சின்கள், ஆகியவற்றை பராமரிப்பதில் உள்ள இடைவெளிகளை நீக்கவும், இந்திய ரயில்வேயின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் 28.10.2022 முதல் ஒரு மாத காலத்திற்கு மாபெரும் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்குமாறு கோட்ட ரயில்வேகளுக்கு   ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த இயக்கத்தின் போது தலைமையகங்கள் மற்றும் கோட்டங்களில் உள்ள அதிகாரிகள், ஆய்வுப் பணி நேரத்தில் உடனிருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து கோட்ட ரயில்வேக்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கோட்ட இயக்கத்தின் போது ஒவ்வொரு நாள் ஆய்விலும் குறைந்தபட்சம் ஒரு தலைமையக அதிகாரியாவது இருக்கவேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு கோட்டத்தின் முக்கியமான ஒவ்வொரு பிரிவிலும் இரவுநேர  சோதனை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுளளது.

அனைத்து தடங்களிலும் தொடர்ச்சியான ரோந்துப்பணி, தினசரி அடிப்படையில் இதன் மீதான கண்காணிப்பு, முறையான இயக்க நடைமுறைகளை உறுதி செய்ய ரயில்நிலையங்களில், திடீர் சோதனைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று ரயில்வே வாரியம் கூறியுள்ளது. ரயில்வே கேட்,  ரயில் நிலையம் மற்றும் இதர பகுதிகளில் உள்ள ஊழியர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு முறையை மீறக்கூடாது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply