இலங்கை கடற்படை சமூக நலத்திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்!

MEDICAL CAMP SLN MEDICAL CAMP SLN-1 MEDICAL CAMP SLN-2 MEDICAL CAMP SLN-3 MEDICAL CAMP SLN-4 MEDICAL CAMP SLN-5

இலங்கை கடற்படை சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அனலதீவில் அய்யனார் பாலர் பாடசாலையில், இலங்கை வடக்கு கடற்படைப் பகுதி கமாண்டர் ரையர் அட்மிரல் ஜயந்த டி சில்வா ஆகியோரின் ஆதரவின் கீழ், செப்டம்பர் 24, 2017 அன்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

குழந்தை சுகாதாரப் பிரச்சினைகள், வாய், பல் நோய்கள், வயதான உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கடுமையான, நீண்டகால உடல் நல நோய்கள், அத்துடன் பழக்க வழக்க பாதுகாப்பு மற்றும் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் அனைத்து ஆய்வக விசாரணைகளும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

அனலதீவில் வாழும் குடும்பங்கள் மற்றும் புதிதாக மீள்குடியேற்றப்பட்ட குடிமக்கள் உட்பட 337 நோயாளிகள் இம்மருத்துவ முகாம் மூலம் பயனடைந்தனர்.

-என்.வசந்த ராகவன்.