ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைப்பெற்றது : 82.54 சதவீத வாக்குகள் பதிவானது!

srirangamsrirangam by electionsrirangam by election pollingsrirangam by election polling1

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அமைதியான முறையில் இன்று நடைப்பெற்றது.  இத்தேர்தலில் 82.54 சதவீத  வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 322 மையங்களில், மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 79 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து ஆறு ஆண்களும்,  ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 56 பெண்களும், 7 திருநங்கைகளும் வாக்களித்துள்ளனர்.

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை விட, 1.59 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 -டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in