‘தி இந்து’ ஊடக உணவகங்களில் அசைவம் சாப்பிட கூடாது என நிருவாகம் உத்தரவு : அசைவ ஊழியர்கள் ஆவேசம்!

hindu_paper-logoதி இந்து நாளிதழின் உணவகத்தில் ஊழியர்கள் யாரும் அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது என ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

the hindu noticeதி இந்துவில் பணியாற்றுவோரில் ‘பெருபாலானோர்’ சைவம் சாப்பிடுகிற காரணத்தால், அசைவம் சாப்பிடுவது ‘அந்த பெரும்பாலானோருக்கு’ தொந்தரவாக இருப்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தி இந்து நிருவாகம் தெரிவித்துள்ளது.

அசைவம் சாப்பிடுவது, சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு தொந்தரவாக இருக்குமேயானால், இருதரப்பினருக்கும் தனி, தனியே உணவருந்தும் இடங்களை அமைக்கலாம், அதைவிட்டுவிட்டு இது போன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பிப்பது எந்த வகையில் நியாயம்?

விரும்பிய உணவை உண்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை தி இந்து நிருவாகம் எப்படி தட்டிப்பறிக்கலாம்? இந்திய சுதந்திர நாட்டில் சுதந்திரமாக உணவருந்தகூட உரிமை இல்லையா? என்று அசைவம் சாப்பிடும் ஊழியர்கள் ஆவேசப்படுகின்றனர்.

மனித உரிமைகளைப் பற்றி பக்கம், பக்கமாக எழுதும் ‘தி இந்து’ நிருவாகம் தமது ஊழியர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

-இரா.அருண்கேசவன்.