டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோ செல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படி வழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (17.07.2021) தற்போது நடைப்பெற்று வருகிறது.
அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்காக இந்திய ஆண், பெண் ஹாக்கி அணியினர் தற்போது புதுடில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மொத்தம் 127 இந்திய விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றவர்களை விட, இவர்கள் அதிகம் என்பதால் இந்த எண்ணிக்கை சாதனையாக கருதப்படுகிறது.
-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Congratulations to all players….