திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவந்திலிங்கபுரம் என்ற கிராமத்தில் நடைப்பெற்று வரும் கோயில் திருவிழாவில், நேற்று இரவு 12.30 மணியளவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முசிறி காவல் நிலைய தலைமை காவலர்கள் உமர் மற்றும் மோகன் ஆகியோரை, பிரவீன் என்பவர் அரிவாளால் வெட்டியதில், காவலர்கள் இரண்டு பேரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இரண்டு பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுக்குறித்து முசிறி துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், முசிறி காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து (FIR NO: 131/2018) விசாரித்து வருகின்றனர். முசிறி காவல் நிலைய ஆய்வாளர் தற்போது விடுமுறையில் இருப்பதால், இப்பொறுப்பை தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் கூடுதலாக கவனித்து வருகிறார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Idukkuthan India sudandram petradu.