காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: திருச்சியில் நடிகர் கமல்ஹாசன் வழங்கினார்!

திருச்சி, திருவெறும்பூர், கணேசபுரம், பெல் ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தைப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த உஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து உயிரிழந்த உஷா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மகளிர் தின பொது மேடையில் அறிவித்தார்.

இந்நிலையில், உயிரிழந்த உஷாவின் தாயார் மற்றும் அவரது அண்ணன் ஆகியோரையும், உஷாவின் கணவர் ராஜாவையும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று தனித்தனியாக சந்தித்தார்.

உஷாவின் தாய் லூர்து மேரியிடம் ரூ.5 லட்சமும், உஷாவின் கணவர் ராஜாவிடம் ரூ.5 லட்சமும் தனித்தனியாக வழங்கினார்.

யாராவது ஒருவரிடம் ரூ.10 லட்சத்தையும் வழங்கினால், அத்தொகையை பங்கீட்டுக் கொள்வதில் பிரச்சனை வரும் என்பதால், பெண் வீட்டிற்கு பாதித்தொகையையும், மாப்பிள்ளை வீட்டிற்கு பாதித்தொகையையும், நடிகர் கமல்ஹாசன் பிரித்துக்கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply