திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா பொதுமக்களால் வித்தியாசமான முறையில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மன்னார்குடி திருமஞ்சன வீதியில் உள்ள செந்தூர ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு செந்தூரம் சாற்றி அலங்கரித்திருந்தனர். பின்னர் ராமபிரானுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.
பின்னர் பக்தர் ஓருவர் விஸ்வரூப ஆஞ்சநேயர் வேடம் தரித்து, கதையினை கையில் ஏந்தி, ராம நாமம் கூறியபடி ஆடி வந்தார். அவரை சுற்றிலும் வாணர வேடமிட்ட 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வட்டமிட்டபடி வந்தனர்.
இவர்களை தொடர்ந்து பஜனை குழுவினர் வாத்தியங்களை இசைத்தபடியும் அனுமன் சுவாமியின் பெருமைகளை கூறும் பாடல்களை பாடியபடியும் வந்தனர்.
வழியெங்கும் திரண்டு நின்ற பக்தர்கள் வாழைப்பழங்களை வழங்கி ஆசிப்பெற்றனர். வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்ட இந்த அனுமன் ஜெயந்தி விழாவை சிறுவர்களும், பெரியவர்களும் பார்த்து மகிந்தனர்.
-ஜி.ரவிச்சந்திரன்
