திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ், தனது தொகுதிக்கு உட்பட்ட குமரேசபுரத்தில் தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். அதன் அருகில் பழுதடைந்திருந்த பகுதி நேர நியாய விலை கடை கட்டிடத்தையும் ஆய்வு செய்தார்.
மேலும், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் மற்றும் அரியமங்கலம் ரயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை மற்றும் சுரங்கப்பாதை சாலைகளை போடாமல், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் “மதுக்கான்” நிறுவனம் இழுத்தடித்து வந்தது.
இதையறிந்த திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலைகளை உடனே அமைக்காவிட்டால், மக்களை திரட்டி சுங்க சாவடியை முற்றுகையிடுவேன் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் 09.11.2017 அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.
http://www.ullatchithagaval.com/?p=27286
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலைகளை உடனே அமைக்காவிட்டால், மக்களை திரட்டி சுங்க சாவடியை முற்றுகையிடுவேன்: திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் தகவல்.
இந்நிலையில், மேற்படி சாலைகளை அமைக்கும் பணியில் “மதுக்கான்” நிறுவனம் தற்போது ஈடுப்பட்டு வருகிறது. இன்று இப்பணிகளை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
-ஆர்.சிராசுதீன்.
