டி.டி.வி.தினகரன் சார்பில் கொடுத்த புகார் தொடர்பாக, E.மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

E.மதுசூதனன்.

E.மதுசூதனன்.

Notice_310320171

Notice_310320172

E.மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸின் உண்மை நகல்.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி.தினகரன் சார்பில் கொடுத்த புகார் தொடர்பாக, வரும் 3-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு E.மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியதையடுத்துஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்பன்னீர்செல்வம் அணிக்கு ...தி.மு. புரட்சித்தலைவி அம்மா என்ற கட்சிப் பெயரும், மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதேபோல, சசிகலா அணிக்கு ...தி.மு. அம்மா என்ற கட்சிப் பெயரும், தொப்பி சின்னமும் வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில்பன்னீர்செல்வம் அணியின் மின்கம்பம் சின்னத்தை முடக்கக் கோரி, டி.டி.வி.தினகரன் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். அதில், ...தி.மு. புரட்சித்தலைவி அம்மா அணியினர், மின்கம்பம் சின்னத்தை, இரட்டை இலைச் சின்னம் போல தவறாக பரப்புரை செய்வதாக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து, இதுதொடர்பாக பதிலளிக்கும்படி, E.மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் வரும் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க மதுசூதனனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

–டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com